
சென்னை: கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது. மருத்துவ குணம் உள்ள சாம்பார் வெங்காயம் சாகுபடி பரப்பு குறைவாக இருப்பதால், இதன் விலை வழக்கமாகவே உயர்ந்தே இருக்கும். சராசரியாக கிலோ ரூ.50-க்கு விற்கப்படும். சில மாதங்களில் கிலோ ரூ.120 வரை உயரும். ஆனால், தற்போது அதன் விலை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான கேரட், முருங்கைக்காய், அவரைக்காய் தலா ரூ.40, பீன்ஸ் ரூ.25, பாகற்காய், கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.20, தக்காளி ரூ.18, முள்ளங்கி, நூல்கோல், பெரிய வெங்காயம், புடலங்காய் தலா ரூ.15, பீட்ரூட், வெண்டைக்காய் தலா ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.5 என விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, ``கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் சாம்பார் வெங்காயம் விலை குறைந்துள்ளது'' என்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YsF2zPK
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக