
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மேலும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.80,480-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க எண்ணியிருந்தோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xCb3kQW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக