
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iu2sxPz
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக