மேலும் விரிவான தகவல்களை பெற கிழே உள்ள வீடியோ லிங்க்கினை க்ளிக் செய்யவும்
We share our knowledge about financial literacy, Stock investments, Future and Options trading, Post market and Pre market analysis, Live trading program, wealth creation etc.,
திங்கள், 11 ஜூலை, 2022
பங்குச் சந்தை ஓர் அறிமுகம்
ஒரு நிறுவனம் தங்களின் நிதி தேவைக்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு பங்குச் சந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய நிறுவனங்கள் தனது பங்குகளை இந்தியாவில் தேசிய பங்கு சந்தை (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தை (BSE) மூலமாக வெளியிடுவதால் நாம் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆக முடிகிறது. பங்குசந்தையில் முதலீடு செய்வதன் மூலமாக அந்தந்த நிறுவனங்களின் பங்குதாரர் என்ற அடிப்படையில் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்பொழுது லாபத்தின் ஒரு சிறிய தொகை பங்குதாரர்களுக்கு பங்கீடாக அளிக்கப்படுகிறது. மீதமுள்ள லாப தொகையை மீண்டும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்து அதன் பங்கின் விலை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது.இதுவே, ஒரு பங்கின் விலை உயர்வுக்கான முதன்மையான காரணமாகும்.மேலும், ஒரு பங்கானது அதன் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பங்கின் விலை நகர்வு பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக