பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் தனது முதலீட்டை நீண்ட கால அடிப்படையில் நல்ல முறையில் வளர்ச்சி அடைய செய்ய முடியும். மேலும், பணவீக்கத்தை விட அதிகமான வளர்ச்சி அடைய பங்கு சார்ந்த முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வதே சிறந்ததாகும்.
பங்கு சார்ந்த முதலீடு திட்டங்கள்:
1.நேரடி பங்கு முதலீடு (INDIVIDUAL STOCKS)
நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது அதிக லாபம் நிறைந்ததாகும். நேரடியாக ஒரு பங்கை தேர்வு செய்து முதலீடு செய்யும் பொழுது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்து அந்த பங்கின் விலை நகர்வு இருக்கும்.
எடுத்துக்காட்டாக, இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூபாய் பத்தாயிரம் (Rs.10000) கொடுத்து 1992 ஆம் ஆண்டு ஒருவர் முதலீடு செய்திருந்தால் தற்போதைய அந்த பங்கின் மதிப்பு சில கோடிகளில் இருக்கும். இதுவே நேரடியாக பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதினால் ஏற்படும் நன்மையாகும்.
நேரடி பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது எப்படி என்பதை அடுத்த வரும் கட்டுரையில் விரிவாக காண்போம்.
2.பரஸ்பரநிதி (MUTUAL FUND)
பரஸ்பரநிதி முதலீடு பங்குச்சந்தையில் புதிதாக வருவோர்க்கு ஏற்ற முதலீட்டுத் திட்டமாகும்.நேரடி பங்கு தேர்வு செய்வது புதிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.
பரஸ்பரநிதி முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் பல்வேறு துறை சார்ந்த பங்குகளை ஒன்று இணைந்து உருவாக்கப்பட்ட போர்ட்போலியோவை ஒரு பண மேலாளர் (FUND MANAGER) மூலமாக நிர்வகிக்கப்படுகிறது.
பரஸ்பர நிதி முதலீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பின்வரும் கட்டுரைகளில் விரிவாக காண்போம்.
மேலும் விரிவான தகவல்களை பெற கிழே உள்ள வீடியோ லிங்க்கினை க்ளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக