offer for you

வியாழன், 14 ஜூலை, 2022

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அதிக பணம் அவசியமா?

 பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு அதிகமான பணம் தேவைப்படுமென்று நம்மில் பலர் பங்குச்சந்தை முதலீட்டை தவிர்த்து இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் பங்குச்சந்தையில் குறைந்த பணத்தை கொண்டும் முதலீடு செய்ய முடியும். நேரடியாக ஒரு பங்கை தேர்வு செய்யும் பொழுது அந்த பங்கின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். சில பங்குகளின் விலை மிக அதிகமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் முன்னணி நிறுவனமான HDFC Bank பங்கின் விலை சுமார் ரூ.1400 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இதே போன்று, மற்றொரு நிறுவனமான SBI Bank பங்கின் விலை சுமார் ரூ 480 என்ற அளவில் வர்த்தகமாகிறது. REALIANCE  பங்கின் விலை சுமார் ரூ 2400 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது நாம் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது.  

பங்குசந்தையில் விலை மலிவான பங்குகளை (Penny Stocks) புதிய முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார்கள். இதனால் பங்குச்சந்தையில் தரம் குறைவான பங்குகளில் விலை குறைவாக இருப்பதன் காரணமாக மட்டுமே முதலீடு செய்கிறார்கள். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு முதலீடு செய்யப்படும் பங்குகளின் விலை நகர்வில் எந்த மாற்றமும் பெரும்பாலான நேரங்களில் நிகழ்வது இல்லை. நாளடைவில் தரம் குறைவான பங்குகள் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுகின்றன. இதனால், சிறு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது அந்த நிறுவனங்களை அடிப்படை பகுப்பாய்வு செய்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.  

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற மலிவான விலையில் கிடைக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் ETF எனப்படும் எக்சேஞ்ச் ட்ரேடெட் பண்ட் ஆகும். இத்திட்டத்தில், இந்தியாவில் பல்வேறு துறை சார்ந்த ETF திட்டங்கள் செயல்படுகிறது. 


எடுத்துக்காட்டாக, சில சிறப்பான ETF திட்டங்கள் உங்கள் பார்வைக்கு 

1. தொழில்நுட்ப துறை ETF 

2. ஆட்டோ செக்டார் துறை ETF 

3. பார்மா செக்டார் துறை ETF

4. FMCG செக்டார் துறை ETF

5.பேங்க் & பைனான்ஸ் செக்டார் துறை ETF

6.நிபிட்டி 50 ETF  etc.

தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ETF விபரங்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்     

ETF திட்டங்களில் முதலீடு செய்வதைப்பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now