நிப்டி 50 ETF நீண்ட கால முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டமாகும். நிப்டி 50 ETF என்பது தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி-ல் உள்ள 50 முன்னணி நிறுவனங்களின் மதிப்பினை அதே சதவிகிதத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும். மேலும் நிப்டி-ல் உள்ள 50 நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து சரியான முறையில் செயல்படாத நிறுவனங்களை நீக்குவது மற்றும் புதிய நிறுவனங்களை நிப்டி-ல் கொண்டு வருவதை போல (Portfolio Rebalancing) நிப்டி 50 ETFலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.எனவே நிப்டி 50 ETF ல் முதலீடு செய்வது தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி-ல் முதலீடு செய்வது போன்றதாகும்.
நிப்டி 50 ETF யில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமாகும். புதிய டீமேட் கணக்கு தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.
மேலும், டீமேட் கணக்கு தொடங்க தேவையான தகவல்களைப் பெற இங்கு கிளிக் செய்யவும்.
பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகளைப் போலவே ETF பண்டுகள் தினசரி வர்த்தகமாகிறது. ஆதலால், நாம் ETF ஐ பங்குச்சந்தை வர்த்தகமாகும் காலை 9.15 AM முதல் 3.30 PM வரையிலான நேரத்தில் வாங்கவும் மற்றும் விற்பனை செய்யவும் முடியும். நிப்டி 50 ETF ல் முதலீடு செய்ய பல்வேறு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பதிவு பெற்று இத்திட்டத்தினை வழங்குகின்றன. ETF திட்டங்கள் மற்றும் வகைகள் ஆகியவற்றின் விபரங்களை பெற இங்கு கிளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டாக, நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் மூலம் வர்த்தகமாகும் நிப்டி பீஸ் (Nifty bees) என்ற நிப்டி 50 ETFல் முதலீடு செய்ய மிக குறைந்த தொகை ரூ 174(14.07.2022 படி) மட்டுமே தேவை படுகிறது. மேலும், ஒருவர் இத்திட்டத்தின் மூலம் தினமும் அல்லது வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து வந்தால் மிக பெரிய அளவில் முதலீடானது வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. கடந்த 20 ஆண்டு கால அடிப்படையில் நிப்டி 50 சுமார் 14.8% (CAGR) கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டு தோறும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக