offer for you

சனி, 16 ஜூலை, 2022

பங்குச்சந்தையில் எப்போது முதலீடு செய்யலாம்?

 பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம் இதுதான் என்று அனைவராலும் கணிக்க முடியாது. ஆதலால், பங்குச்சந்தையில் முதலீட்டை துவங்குவதற்கு சிறந்த வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம். 

1. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டியின் தற்போதைய விலை அதிகப்பட்ச விலையில் இருந்து குறைந்தது 10 %  க்கு மேல் வீழ்ச்சியடைந்து இருக்கும் பொழுது புதிய முதலீடு செய்ய துவங்கலாம். 

2. சில நேரங்களில் பங்குச்சந்தை தொடர்ந்து சரியும் பொழுது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். 

எ.கா:தற்போது நிப்டி குறியீடு எண் 16100 யில் வர்த்தகமாகிறது என்று எடுத்து கொள்வோம் தாங்கள் முதலீடு  செய்ய நினைக்கும் தொகை ரூ.10000 என்றால் அதில் 10% தொகையை மட்டும் முதலில் முதலீடு செய்ய வேண்டும்.மீதமுள்ள தொகையில் ஒவ்வொரு 10%யும் நிப்டி-ன் குறியீடு 200 முதல் 300 புள்ளிகள் இறக்கத்தின்போதும் முதலீடு செய்ய வேண்டும்.

3. பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பொழுது புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

4. உபரியாக உள்ள பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.

5. பங்குச்சந்தை ஏற்ற   இறக்கங்களுக்கு உட்பட்டது. ஆதலால், நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும். 

6.பங்குச்சந்தை உலக அளவில் சில காரணிகளால் வீழ்ச்சியடையும் பொழுது (பொதுவாக பணவீக்கம், பொருளாதார மந்த நிலை, போர் சூழல்) அனைத்து பங்குகளின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்து மலிவான விலையில் கிடைக்கும். இதுபோன்ற தருணத்தில் அதிகமான தொகையை முதலீடு செய்யலாம். 

7.பங்குச்சந்தையில் அனைவரும் பேராசை படும் பொழுது (தொடர்ந்து பங்குச்சந்தை ஏற்றம் காணும் பொழுது) நாம் பயப்பட வேண்டும். (புதிய முதலீடுகளை தவிர்த்து ஏற்கனவே செய்த முதலீடுகளில் உள்ள லாபத்தினை எடுத்து பங்கு சாரா முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம்).   


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now