எஸ்.ஐ.பி முறையில் அதாவது சிஸ்ட்மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் முறையில் ஒரு சிறிய தொகையை உடனடியாக நிப்டி 50 ETF ல் முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து முதலீடு செய்தால் அந்தத் தொகை கண்டிப்பாக அடுத்த 25 ஆண்டுகளில் கோடிகளில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் நீங்கள் தினமும் வெறும் 250 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அதாவது மாதம் ரூபாய் 7500 நிப்டி 50 ETF ல் முதலீடு செய்தால் போதும். 25 வருடங்கள் கழித்து உங்கள் பணம் கோடியை நெருங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் 7500 ரூபாயை நீங்கள் 25 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்த தொகை சுமார் 22.5 லட்சமாக இருக்கும். இந்த தொகைக்கு ஆண்டுக்கு 10% வருமானம் பெற்றாலும் 25 வருடத்திற்கு 77.8 லட்சமாக வட்டியாக கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்த 22.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்த தொகை ரூ 1 கோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக