offer for you

சனி, 23 ஜூலை, 2022

மியூச்சுவல் பண்ட் முதலீடு

மியூச்சுவல் பண்ட் NAV (NET ASSET VALUE) என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு யூனிட் விலையாகும். மியூச்சுவல் பண்ட்-ல் முதலீடு செய்யும்போது நமக்கு முதலீட்டிற்கேற்ப யூனிட்கள் வழங்கப்படுகிறது.

எ.கா: ரூ.10 மற்றும் ரூ.20 உள்ள இரண்டு பண்டுகளில் தலா ரூ.10,000 முதலீடு செய்தால், முதல் நிறுவனத்தில் நீங்கள் 1000 யூனிட்டும், இரண்டாவது நிறுவனத்தில் நீங்கள் 500 யூனிட்டும் பெறுவீர்கள். 

mutual fund investment

பல முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் கடந்தகால செயல்திறனை வைத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கின்றனர். பல்வேறு சந்தை சுழற்சிகள் மற்றும் காலகட்டங்களில் நிதி எவ்வாறு செயல்பட்டது என்பதை பற்றிய தகவல்களைப் பெற கடந்த கால செயல்திறனை பார்ப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு பண்டை தேர்ந்தெடுப்பதற்கு, அந்த பண்டினை பெஞ்ச்மார்க் குறியீடுகள் மற்றும் பியர் (PEER) பண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

டிவிடெண்ட் பண்ட் மற்றும் குரோத் பண்ட் என இருவகையான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன.

குரோத் பண்ட் திட்டங்களில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகையானது அதே திட்டத்தில் மறு முதலீடு செய்யப் பட்டு பண்டின் NAV மதிப்பு மாற்றியமைக்கப்படுகிறது. 

டிவிடெண்ட் பண்ட் திட்டங்களில் டிவிடெண்ட் அறிவிப்புக்குப் பிறகு டிவிடெண்ட் தொகையானது முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பிறகு பண்டின் NAV மதிப்பு மாற்றியமைக்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் என்பது பங்குச் சந்தையில் கண்டிப்பாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி தொடர்ந்து தங்கள் முதலீடுகளை சிஸ்டெமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையில் தொடர வேண்டும்.

மியூச்சுவல் பண்டுகள் தங்கள் முதலீட்டு நோக்கங்கள், முதலீட்டு ஆணை மற்றும் சொத்து ஒதுக்கீடு சந்தை அபாயம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடுகின்றன. ஒரு மியூச்சுவல் பண்டை தேர்ந்தெடுக்கும் போது நிதி/திட்டத்தின் முதலீட்டு நோக்கங்கள் உங்கள் நிதி விவரத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து முதலீடு செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now