நிதி இலக்குகள்(Financial Goal setting) நிர்ணயம் செய்வது எப்படி?
நிதி சுதந்திரம் அடைய நாம் முதலில் இலக்குகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
முதலில் நமது இலக்குகள் என்ன என்பதை கண்டறிந்து அதனை பட்டியலாக தயார் செய்ய வேண்டும்.
நாம் பட்டியலிட்ட இலக்குகளில் எது முதன்மையானதாக கருதுகிறோமோ அதை மட்டும் நமது முதன்மை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் குறிப்பிட்ட இலக்கை அடைய முழுமையான கவனம் செலுத்த முடியும்.
ஒருவர் முதன்மை இலக்காக வெளிநாடு சுற்றுலா செல்வதாக இலக்கு நிர்ணயம் செய்திருந்தால்,அதற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வெளிநாடு சுற்றுலா செல்ல அவருக்கு ரூ.1,00,000 தேவைப்படும் என எடுத்து கொள்வோம். அவருடைய மாத வருமானம் சுமார் ரூ.50,000 என எடுத்து கொள்வோம். மேலும், அவர் மாதந்தோறும் ரூ.10,000 சேமிக்க முடியும்.
அப்படியானால், அவர் அடுத்த 10 மாதங்களில் சுற்றுலாவிற்கு தேவைப்படும் ரூ.1,00,000 அவரால் சேமிக்க முடியும். ஓரிரு மாதங்கள் எதிர்பாராத செலவுகளால் சேமிப்பை செய்ய இயலாமல் போகலாம். ஆதலால் 10 மாதங்கள் என இலக்கு நிர்ணயம் செய்யாமல் 1 வருடம் என கால நிர்ணயம் செய்து இலக்கை அடைய முடியும்.
இவ்வாறாக நாம் பட்டியலிட்ட ஒவ்வொரு இலக்குகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடைய முடியும்.
நிதி இலக்குகளை அடைய நமது இலக்குகள் தனித்துவமானதாக இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் பல இலக்குகளில் கவனம் செலுத்த கூடாது.
எது நமக்கு உடனடி தேவையோ அதை மட்டும் நமது முதன்மை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக