offer for you

வியாழன், 28 ஜூலை, 2022

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம்(GOLD) வாங்குவது எப்படி?

 

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம்(GOLD) வாங்குவது எப்படி?

இந்திய மக்களிடையே அதிகமாக ஆபரணத் தங்கம் வாங்கும் பழக்கம் உள்ளது. ஆபரணத் தங்கம் வாங்கும் பொழுது நமக்கு செய்கூலி சேதாரம் என்று அதிகமாக செலவுகள் ஆகின்றன. 8 கிராம் ஆபரணத் தங்கம்  வாங்க செய்கூலி சேதாரம் சேர்த்து 9 கிராம் தங்கத்தின் விலை கொடுக்க வேண்டி உள்ளது.

முதலீடு செய்யும் நோக்கத்தில் ஆபரணத் தங்கம் வாங்க கூடாது. நம்மில் பெரும்பாலானோர் ஆபரணத் தங்கம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை முதலீட்டிற்காக வாங்குகின்றனர். 

ஆபரணத் தங்கம் மற்றும் தங்க நாணயம் வாங்கும் பொழுது நமக்கு செய்கூலி சேதாரம் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. தங்க நாணயத்தை விற்பனை செய்யும் பொழுது அன்றைய தங்கத்தின் விலையில் விற்பனை செய்ய முடியும். ஆனால் ஆபரணத் தங்கத்தை விற்பனை செய்யும் பொழுது அன்றைய தங்கத்தின் விலையை விட குறைவான விலைக்கே விற்பனை செய்ய முடியும். ஆபரணத் தங்கமோ தங்க நாணயமோ நாம் விற்கும் பொழுது செய்கூலி சேதாரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொள்ளப் படுவதில்லை.

 முதலீடு நோக்கத்தில் ஆபரணத் தங்கமோ தங்க நாணயமோ வாங்குவதற்குப் பதிலாக gold etf அல்லது gold fund மூலமாக முதலீடு செய்யலாம். gold etf-ல் முதலீடு செய்ய ரூ.43 மட்டுமே பயன்படுத்தி 1mg தங்கத்தை வாங்க முடியும். இதன் மூலம் செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கத்தை சந்தையில் வாங்கவும் முடியும். நமக்கு தேவையான நேரத்தில் சந்தை விலையிலேயே விற்பனை செய்யவும் முடியும். gold etf இல் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமாகும். 

இலவசமாக டீமேட் கணக்கு தொடங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now