பணத்தை நிர்வகிப்பது (MONEY MANAGEMENT) எப்படி?
நாம் அனைவரும் நமக்கு வரும் வருமானத்திலிருந்து 10-20% வரை கண்டிப்பாக சேமிக்க வேண்டும்.
நாம் செலவழிக்கும் முதல் தொகை நமது சேமிப்பாக இருக்க வேண்டும்.ஒருவரது வருமானம் ரூ.10000 என்றால் அவர் முதலில் குறைந்தபட்சம் 10% ரூ.1000 -யை சேமிக்க வேண்டும். மீதமுள்ள தொகை ரூ.9000-யை மட்டும் மாத வருமானமாக கருதி மற்ற செலவுகளை (கடன் உட்பட) செய்ய வேண்டும்.
ஒருவர் அதிகமாக வருமானம் ஈட்டினாலும் அவர் வருமானத்துக்கு ஏற்ப செலவீனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆதலால் நாம் அனைவரும் சேமிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு சேமிக்கும் பணத்தின் ஒரு பகுதியை நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதால் மட்டுமே நமது பணத்தை பல மடங்காக பெருக்க முடியும்.
ஆடம்பர செலவுகளுக்காக கடன் வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே, கடன் உள்ளவர்கள் கடனுக்கான EMI தொகையை தவறாமல் செலுத்தி முதலில் கடனை அடைப்பது சிறந்தது.
ஒருவர் ஆடம்பர பொருள் ஒன்றை வாங்க நினைத்தால் எ.கா:ஸ்மார்ட் டிவி-யின் விலை ரூ.15000 என்று எடுத்துக் கொள்வோம். உடனடியாக நமக்கு வரும் யோசனை EMI எனப்படும் மாதத் தவணை திட்டத்தின் மூலம் வாங்குவதாகும்.
இவ்வாறாக செய்யப்படும் செலவுகள் (EMI திட்டங்கள்) நமக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இதற்கு பதிலாக மாதம் தோறும் ரூ.1500 சேமித்து வைத்து அடுத்த 10 மாதத்தில் எந்த ஒரு கடனும் இன்றி நாம் அந்த பொருளை வாங்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக