கேள்வி 4: EPS என்றால் என்ன ?
EPS (EARNING PER SHARE) என்றால் ஒரு நிறுவனம் ஒரு பங்கிற்கு எவ்வளவு வருவாய் ஈட்டுகிறது என்பதை குறிப்பதாகும்.
கேள்வி 5: PE RATIO என்றால் என்ன ?
PE RATIO என்றால் ஒரு நிறுவனத்தின் தற்போதைய ஒரு பங்கின் விலை அந்த பங்கு சம்பாதிப்பதைவிட எத்தனை மடங்கு அதிகமாக வர்த்தகம் ஆகி கொண்டிருக்கிறது என்பதை குறிப்பதாகும்.
எ.கா: PE RATIO= CURRENT SHARE PRICE / EARNING PER SHARE
ஒரு நிறுவனத்தின் தற்போதைய பங்கின் விலை ரூ 150 என்றால் அதன் EPS ரூ.5 என்றால் PE =150/5, அந்த நிறுவனத்தின் PE =30 ஆகும்.
கேள்வி 6: ROE (RETURN ON EQUITY) என்றால் என்ன ?
ROE என்றால் ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்தை குறிப்பதாகும். அதாவது ஒரு நிறுவனத்தின் ROE என்பது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை (net income) பங்குதாரர்களின் ஒட்டுமொத்த பங்கினால் வகுத்தால் கிடைக்கும் ஒட்டுமொத்த சொத்தை (net assets) குறிப்பதாகும்.
கேள்வி 7: PAT (PROFIT AFTER TAX) என்றால் என்ன ?
ஒரு நிறுவனத்தின் வருவாயிலிருந்து அனைத்து வரிகளையும் கழித்தது போக மீத தொகையை குறிப்பதாகும்.
தொடரும்.,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக