பணவீக்கம் என்பது ஆண்டுதோறும் ஏற்படும் பொருள்களின் விலை உயர்வினால் பணத்தின் மதிப்பு குறைவது ஆகும். அதாவது ஒரு பொருளின் தற்போதைய விலை ரூ.100 என்றால் அதே பொருளை அடுத்த வருடம் ரூ.108 கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. தற்போது பொருளின் மதிப்பு சுமார் 8% உயர்ந்துள்ளது. இதைத்தான் பணவீக்கம் கடந்த ஆண்டைவிட 8% அதிகரித்துள்ளது என்பார்கள். நாம் பொதுவாக வங்கி வைப்பு நிதியில் பணத்தை சேமிக்கும் பொழுது நமக்கு 6% வட்டியாக கிடைக்கிறது. பணவீக்கம் காரணமாகவே நாம் வங்கியில் சேமிக்கும் தொகைக்கு பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியால்(RBI) வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் நம் வங்கியில் சேமிக்கும் தொகையானது பணவீக்கத்தை விட குறைவான வருமானத்தையே தருகிறது. பங்குச்சந்தை சராசரி ஆண்டு வருமானம் கடந்த 20 ஆண்டு கால அடிப்படையில் 15% வரை கொடுத்துள்ளது. இதனால்தான் பங்குச்சந்தை முதலீட்டு திட்டங்களே பணவீக்கத்தைவிட அதிகமான வளர்ச்சி தரும் திட்டடங்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக