offer for you

புதன், 20 ஜூலை, 2022

பங்குச்சந்தை(Share Market) சந்தேகங்கள்-பதில்கள் பாகம் 1


 கேள்வி1 : பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பதில்: நீங்கள் செய்யும் வெவ்வேறு முதலீட்டு திட்டங்களில் ஈட்டப்படும் லாபம் கூட்டு தொகை (COMPOUNDING) அடிப்படையில் உயர்கிறது. நீண்ட கால அடிப்படையில் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில் மற்ற திட்டங்களை காட்டிலும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.சராசரியாக தங்கத்தில் முதலீடு செய்யும் பொழுது நீண்ட கால அடிப்படையில் அதன் வளர்ச்சி விகிதம் 5 முதல் 10 % மட்டுமே உள்ளது.நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட் முதலீடுகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மந்த நிலையிலேயே உள்ளது. இதனால் பணவீக்கத்தைவிட அதிகமான வளர்ச்சி தரும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

கேள்வி2: காம்பவுண்டிங் (Compounding) என்றால் என்ன?

பதில்: விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது போல் உலகின் எட்டாவது அதிசயம் காம்பவுண்டிங் ஆகும். முதலீடுகளில் ஆண்டுதோறும் பெறப்படும் லாபத்தினை மீண்டும்  மீண்டும் முதலீடு செய்து மூலதனத்தை அதிகரிப்பதால் நமக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கிறது. இவ்வாறு முதலீட்டின் வளர்ச்சியை CAGR முறையில் கணக்கிடப்படுகிறது.

எ.கா: ஒரு பங்கு சராசரியாக ஆண்டுதோறும் 12% வளர்ச்சி அடைவதாக எடுத்து கொள்வோம். அந்த பங்கானது 6 ஆண்டுகளில் 2 மடங்கு வளர்ச்சி அடைகிறது.

கேள்வி3: நமது முதலீடு 2 மடங்காக வளர்ச்சி அடையும் காலம் (CAGR) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பதில்: Rule of 72 என்ற சூத்திரத்தை பயன்படுத்தி காம்பௌண்ட் அனுவல் குரோத் ரேட்(CAGR) கணக்கிடலாம்.

எ.கா: CAGR =72/r

CAGR = முதலீடு இரட்டிப்பாகும் காலம் 

r = வளர்ச்சி விகிதம் 

தொடரும்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now