offer for you

புதன், 20 ஜூலை, 2022

சேமிப்பு vs முதலீடு

சேமிப்பு என்பது இந்திய மக்களிடையே கடைபிடிக்கப்படும் வழக்கமான ஒன்றாகும். சேமிப்பு என்பது நமது எதிர்கால தேவைக்கு வருமானத்தின் ஒரு சிறு பகுதியை தனியாக எடுத்து வைக்கக்கூடிய பணமாகும். சேமிப்பதற்கு உதாரணமாக ஒரு வங்கி வைப்பு கணக்கு அல்லது உண்டியலில் சேர்த்து வைப்பது ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். 

* பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு வரும் வருமானத்தில் இருந்து முதலில் செலவுகளை செய்த பிறகு கிடைக்கும் மீத தொகையை மட்டும் சேமிப்பு செய்கிறோம்.

* காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். 

முதலீடு என்பது லாபத்தை எதிர்பார்த்து ஏதாவது பொருளாதார திட்டத்தில் பணத்தை போடுவதை குறிக்கும். பொதுவாக முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையிலானது. பங்குகள், நிலம் சார்ந்த சொத்துக்கள், தங்க ஆபரணங்கள் நிலையான வட்டி தரும் கடன் பத்திரங்கள் ஆகிய முதலீடு வாய்ப்புகள் உள்ளன. குறுகிய கால அடிப்படையில் லாபத்தை எதிர்பார்த்து செய்யும் முதலீடுகளில் அதிக ஆபத்துகள்(ரிஸ்க்) உள்ளது.

*நாம் முதலீடு செய்ய நாம் சேமித்து வைத்த தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

*முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையிலானது ஆகையால் நமக்கு உடனடியாக தேவைப்படும் தொகையை நாம் முதலீடு செய்ய கூடாது.

*பணவீக்கம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் நாம் சேமிக்கும் பணத்தின் மதிப்பு குறைகிறது. அதனால் நம் அனைவரும் சேமிப்பின் ஒரு பகுதியை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

*முதலீடு செய்வதால் மட்டுமே பணத்தை மென்மேலும் பெருக்க முடியும்.

எ.கா: 2004 ஆம் ஆண்டு ஒருவர் ஒரு புல்லட் பைக்கை வாங்குவதற்கு பதிலாக அந்த புல்லட் விலையில் அந்த புல்லட் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் தற்போது சுமார் 40 புல்லட் பைக் வாங்கும் அளவிற்கு முதலீடு வளர்ந்திருக்கும்.

எ.கா: 2004 ஆம் ஆண்டு ஒருவர் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தால் 20 முதல் 30 மடங்கு தற்போது முதலீடு வளர்ந்து இருக்கும்.


சேமிப்பது அவசியமாகும் சேமித்த தொகையை முதலீடு செய்வது மிக மிக அவசியமாகும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now