offer for you

செவ்வாய், 19 ஜூலை, 2022

சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் போர்ட்போலியோ?

 சிஸ்டெமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் போர்ட்போலியோ என்பது நாம் தேர்ந்தெடுத்த பங்குகளை அல்லது பங்கு சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு போர்ட்போலியோவாக உருவாக்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து முதலீடு செய்வது ஆகும்.

எ.கா: மாதிரி பங்கு போர்ட்போலியோ 

NAME OF THE STOCK

NO.OF STOCKS TO BE INVESTED

 INDIVIDUAL  STOCK PRICE

INDUSTRIES

SBIN

                    5

500

BANKING

BERGER PAINT

                    5

540

CONSUMER PRODUCT

SUN TV

                    6

420

MEDIA

WIPRO

                    6

390

IT

 நேரடி பங்குகளை தேர்ந்தெடுத்த பின்னர் ஒருவர் மாதந்தோறும் ரூ.10000 நேரடி பங்குகளில் முதலீடு செய்வதாக எடுத்து கொள்வோம். மேலே கொடுக்கப்பட்டுள்ள பங்கு போர்ட்போலியோவை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் அவர் முதலீடு செய்து கொள்ளலாம் அல்லது அவர் ஒரு குறிப்பிட்ட துறையில் அதிகமாக முதலீடு செய்ய விரும்பினால் போர்ட்போலியோவில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

எ.கா :நேரடி பங்குகளில் முதலீடு செய்ய சரியான பங்குகளை தேர்ந்தெடுக்க இயலாதவர்கள் ETF எனப்படும் எக்சேஞ்சு ட்ரேடெட் பண்டுகளை கொண்ட கீழ்கண்ட மாதிரி போர்ட்போலியோவை பயன்படுத்தி கொள்ளவும்.   

NAME OF THE ETF

NO.OF UNITS TO BE INVESTED

 INDIVIDUAL  ETF PRICE

INDUSTRIES

NIFTY BEES

28 (50%)

178

NIFTY 50

MIDCAP SEL ETF

 15(15%)                 

98

MIDCAP SEL 30

IT BEES

86(25%)              

29

IT INDEX

GOLD BEES

23(10%)                 

43

GOLD




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now