offer for you

வெள்ளி, 4 நவம்பர், 2022

சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி நாளான இன்று மாலை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 114 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 60,950 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 64 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயர்ந்து 18,117 ஆக இருந்தது.

இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்னர் வார இறுதி வர்த்தக நாள் பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 9.28 மணி நிலவரப்படி,சென்செக்ஸ் 29.40 புள்ளிகள் ஏற்றத்துடன் 60,865 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.70 புள்ளிகள் உயர்வுடன் 18053 ஆக இருந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 113.95 புள்ளிகள் உயர்ந்து 60,950.36 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 64.45 புள்ளிகள் உயர்ந்து 18,117.15 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GEICxiu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now