offer for you

வெள்ளி, 30 டிசம்பர், 2022

இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும்: சைமா தலைவர் ரவிசாம் கருத்து

கோவை: இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரலில் கையெழுத்திடப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தமானது அண்மைக்காலத்தில் ஒரு வளர்ந்த நாட்டுடன் இந்தியா ஏற்படுத்தும் முதல் வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அதிக தொழிலாளர்களை கொண்டு செயல்படும் ஜவுளி மற்றும் ஆடை தொழில் பெரிதும் பயனடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1yKDXAu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now