offer for you

திங்கள், 23 ஜனவரி, 2023

விப்ரோ ஊழியர்கள் 450 பேர் பணி நீக்கம்

பெங்களூரு: சர்வதேச அளவில் ஐடி துறையில் வேலைநீக்கம் தீவிரமடைந்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தன. இந்நிலையில், இந்தியாவில் விப்ரோ நிறுவனம் 450 ஆரம்ப நிலை ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து விப்ரோ நிறுவனம் கூறுகையில், “எங்கள் ஊழியர்களிடமும் தரத்தை எதிர்பார்க்கிறோம். கல்லூரி முடித்து புதிதாக பணிக்கு சேரும் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குகிறோம். அதன்பிறகு அவர்களது வேலைத்திறனை மதிப்பிடுகிறோம். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்திறன் குறைவாக உள்ள 452 பணியாளர்களை நீக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aUI3jrT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now