
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 631 புள்ளிகள் (1.04 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,115 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 187 புள்ளிகள் (1.03 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,914 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 304.45 புள்ளிகள் சரிவடைந்து 60,442.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81.40 புள்ளிகள் சரிந்து 18,019.80 ஆக இருந்தது. முந்தைய வாரத்தின் தொடர் சரிவுகளில் இருந்து திங்கள் கிழமை மீண்டிருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k7tNucy
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக