offer for you

சனி, 7 ஜனவரி, 2023

தெற்காசிய நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசு பேச்சுவார்த்தை - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்

புதுடெல்லி: டாலருக்குப் பதிலாக ரூபாயில் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் செய்வது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சக்திகாந்த தாஸ் பேசுகையில், “டாலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C4PA19
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now