
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்ந்து 60,734 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் உயர்வடைந்து 17,869 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கின. தொடர்ந்து வர்த்தக நேரத்தின் போது வீழ்ச்சியை நோக்கி சென்றன. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.80 புள்ளிகள் சரிவடைந்து 60,540.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.30 புள்ளிகள் சரிவடைந்து 17,818.20 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4ITVZq8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக