
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 183 புள்ளிகள் (0.31சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,727 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.26 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,660 ஆக இருந்தது.
கடந்த வாரத்தில் தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியது இருந்தபோதிலும், நிலையில்லாத வர்த்தகத்தால் வீழ்ச்சியைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 181.19 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,729.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.25 புள்ளிகள் சரிவடைந்து 17,678.60 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ci48Bm7
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக