offer for you

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்வடைந்து 59,648 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 17,628 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கிச் சென்றது. பகல் 12:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 67.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,564.50 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.10 புள்ளிகள வீழ்ச்சியடைந்து 17,595.35 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7TeEtRv
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now