
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) வீழ்ச்சியுடனே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் சரிவடைந்து 63,129 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 18,738 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்வடைந்து 63,238.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20.50 புள்ளிகள் சரிந்து 18,776.40 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xwVFHoC
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக