
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை புதிய சாதனை உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 339 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயர்வடைந்து 65,785 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்ந்து 19,497 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சற்றே சரிவுடன் தொடங்கிய போதிலும் பின்னர் ஏற்றம் கண்டது. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 132.37 புள்ளிகள் உயர்வடைந்து 65,578.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 19,425.60 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DtE69mI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக