offer for you

வியாழன், 27 ஜூலை, 2023

சென்செக்ஸ் 440 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 440 புள்ளிகள் (0.66சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,266 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 118 புள்ளிகள் (0.60 சதவீதம்) வீழ்ந்து 19,659 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.33 புள்ளிகள் உயர்வடைந்து 66,792.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.35 புள்ளிகள் உயர்ந்து 19,806.65 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPonZ10
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now