
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்வடைந்து 66,539 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 19,719 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 526.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,882.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
134.60 புள்ளிகள் உயர்ந்து 19,815.20 ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற இன்டக்ஸ் ஹெவிவெயிட் பங்குகளின் லாபத்தால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. பெரும்பாலான துறை பங்குகள் லாபத்தில் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VMsr8E6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக