offer for you

திங்கள், 25 செப்டம்பர், 2023

ஆண்டு முழுவதும் நிரந்தர விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: விவசாயிகள் கோரிக்கை

ஓசூர்: ஆண்டு முழுவதும் நிரந்தர விலை கிடைக்க ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை மற்றும் மண் வளம் காய்கறி சாகுபடிக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறது. மேலும், ஓசூர் காய்கறி சந்தை மூலம் சந்தை வாய்ப்பும் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L6dpkvb
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now