offer for you

புதன், 8 நவம்பர், 2023

கோவையில் அதிக அளவு நிறமிகள் சேர்க்கப்பட்ட 501 கிலோ இனிப்பு, கார வகைகள் பறிமுதல்

கோவை: கோவையில் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ் செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 9 குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மொத்தம் 104 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 8 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அதிக அளவு நிறமிகள் சேர்க்கப்பட்ட 501.3 கிலோ உணவுப் பொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.10 லட்சம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0fu8ji3
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now