
புதுடெல்லி: தீபாவளி கொண்டாடப்பட வுள்ளதையொட்டி மானிய விலையில் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50-க்கு விற்பனை செய்யப்படும்.
மக்களுக்கு அன்றாட தேவையாக விளங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது "பாரத்" பிராண்ட் பெயரில் ஆட்டாவை சில்லறை விற்பனை சந்தையில் மலிவு விலையில் அதிகரிப்பதன் மூலம் கோதுமை போன்ற முக்கியமான உணவுப் பொருட்களின் விலையை படிப்படியாக குறைக்க முடியும் என்று மத்திய நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2BhWYaH
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக