offer for you

சனி, 10 பிப்ரவரி, 2024

2023-24 ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.25% ஆக உயர்கிறது: மத்திய அறங்காவலர் குழு பரிந்துரை

புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதி பகுதியில் முடிவு செய்யப்படுகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்துக்கு வழங்குகிறது. அந்த அடிப்படையில், 2023-24 நிதி ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xgyt1pH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now