offer for you

திங்கள், 19 பிப்ரவரி, 2024

சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்

சென்னை: “உயர்தொழில்நுட்ப தேவை அதிகரித்துக் கொண்டே கருத்திற்கொண்டு, 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> இந்தியாவின் முதலாவது PM MITRA ஜவுளிப் பூங்கா கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி மையமாகத் திகழவிருக்கும் இப்பூங்காவை அமைக்கும் பணிகள் 1,683 கோடி ரூபாய் மதிப்பில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vv04GJu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now