offer for you

திங்கள், 5 பிப்ரவரி, 2024

அதானியின் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலை: மார்ச்சில் செயல்பாட்டுக்கு வருகிறது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலையை அதானி குழுமம் அமைத்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் காப்பர் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகம், நிலக்கரி, விமான நிலையம், எரிசக்தி என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் இயங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது தாமிர உற்பத்தியில் களம் இறங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகநாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மின்வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. இதனால், இந்தியாவில் காப்பர் தேவை அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gOroZQ4
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now