
புதுடெல்லி: இந்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழில்துறை மற்றும் சேவைகள் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்சி நடவடிக்கை மூலம் 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். ஆனாலும், 2025-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்ச்சி 6.6 சதவீதம் என்ற அளவில் மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மந்தநிலைக்கு முந்தைய ஆண்டில் முதலீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2rEB5kT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக