offer for you

வியாழன், 4 ஏப்ரல், 2024

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதானி குழுமம் சாதனை

காந்திநகர்: அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு தற்போது 10 ஆயிரம் மெகாவாட்ஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 10 ஆயிரம் மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை எட்டும் முதல் நிறுவனமாக அது உருவெடுத்துஉள்ளது.

தற்போது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 7,393 மெகாவாட்ஸ் சோலார், 1,401 மெகாவாட்ஸ் காற்றாலை, 2,140 மெகாவாட்ஸ் காற்றாலை - சோலார் ஹைப்ரிட் என மொத்தமாக 10,934 மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 58 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்றும் ஆண்டுக்கு 2.1 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Noa1pRd
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now