
சென்னை: கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் வரத்து குறைவால் அதன் விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து காய் கறிகள் வரத்து குறைந்து விலை சற்று உயர்ந்துள்ளது. பீன்ஸ் வரத்து கடுமையாக குறைந்து விட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. இது நேற்று ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவரைக்காயும் வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/etzpP16
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக