
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 41-வது ஆண்டு வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு வணிக அமைப்புகள் முக்கிய நகரங்களில் மாநாடுகளை நடத்துகின்றன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரையிலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவையிலும் இன்று வணிகர் தின மாநாடுகளை நடத்துகின்றன. இதில் லட்சக் கணக்கான வணிகர்கள் பங்கேற்பதால், தமிழகம் முழுவதும் இன்று கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w9ROfXv
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக