
சென்னை: தங்கம் விலை இன்று (ஜூலை 30) மேலும் குறைந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.51.080-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனையாகிறது.
விலை சரிவு பின்னணி என்ன? கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரியத் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mCsqxXk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக