offer for you

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

சில்லறை பணவீக்கம் ஜூலையில் 3.54% ஆக குறைந்தது!

புதுடெல்லி: 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் (ஜூலை) 3.54% ஆக குறைந்ததாக இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகள் இன்று (ஆக.12) வெளியிடப்பட்டன. அதன்படி, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 3.54% ஆக குறைந்துள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பணவீக்கம் ஜூலை 2023 ல் 7.44% ஆக இருந்துது. அது 2024 ஜூலையில் 3.54% ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தை 4% ஆக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இலக்கை விட குறைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SeCudBj
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now