
புதுடெல்லி: தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
பிரபல ஏர் இந்தியா நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காகவும், தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.90 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விமானம் மும்பையில் இருந்து ரியாத்துக்கு செல்லும்போது தகுதிபெறாத பயிற்சி விமானி விமானத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F9UXRog
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக