offer for you

புதன், 25 செப்டம்பர், 2024

அன்றாடம் புதிய உச்சம் காணும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.480 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை அன்றாடம் புதிய உச்சம் கண்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.7000-க்கு விற்பனையான நிலையில் சென்னையில் இன்று (செப்.25) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவிருப்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இத்தகையச் சூழலில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zvskLxE
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now