offer for you

சனி, 14 செப்டம்பர், 2024

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரிப்பு: நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வரும் நேரத்தில் தங்கம் விலை உயர்ந்திருப்பது நகைவாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலைநேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.6,825-க்கும், பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.54,600-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.57,400-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9fdIoNB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now