
சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு (ஏப்ரல் - செப்டம்பர்) நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சொத்து வரி ரூ.880 கோடி, தொழில் வரி ரூ.260 கோடி என மொத்தம் ரூ.1,140 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.940 கோடி வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இது மாநகராட்சியின் வரி வரலாற்றில் புதிய உச்சம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.90 கோடி வசூலாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aWNHhB8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக