
சென்னை: தமிழகத்தின் தனிநபர் வருமானம் கடந்த 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தை விட அதிகமாக இருந்ததாக தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து திட்டம், வளர்ச்சித் துறை செயலர் இன்று (அக்.21) வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24ம் ஆண்டுக்கான முன் மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது. அதன் சிறப்பு கூறுகள்: > தமிழகத்தின் மொத்த உற்பத்தி நிலையான விலையில் 2022-23 -ம் ஆண்டில் ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24- ம் ஆண்டு நிலையான விலையில் ரூ. 15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WLZQFVa
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக