offer for you

திங்கள், 4 நவம்பர், 2024

அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு ரூ.10 குறைவு: தொழில் துறையினர் நிம்மதி

திருப்பூர்: நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று (செப்4) அறிவித்துள்ளது அதன்படி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ. 10 குறைத்து அறிவித்துள்ளது. கடந்த 6 மாத காலமாக விலையை எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாத சூழலில் தற்பொழுது ரூ‌. 10 விலை குறைந்து இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iFbSvh0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now