offer for you

சனி, 16 நவம்பர், 2024

கடந்த அக்டோபரில் அரிசி ஏற்றுமதி 86 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: அரிசி உற்பத்தி அதிகரித்த நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் தளர்த்தியது. இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அக்டோபரில் 1 பில்லியன் டாலரை (ரூ.8,400 கோடி) தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 85.79% அதிகம் ஆகும். அரிசி ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி நடப்பு அக்டோபர் மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பில் அரிசி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு அக்டோபரில் அது 565 மில்லி யன் டாலராக (ரூ.4,750 கோடி) இருந்தது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fCqzdWP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now