offer for you

சனி, 7 டிசம்பர், 2024

11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்துதல், வங்கி சேமிப்பு கணக்கு தொடங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. நிதிசார் கல்வியானது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பத்தினருக்கும் நிதி சார்ந்த விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xIcTZmd
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now